0 0
Read Time:2 Minute, 16 Second

மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு பிரிவு சார்பில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

இதில் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு நீலகண்டன், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து நகரில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியை போலீசார் நடத்தினர். இதேபோல் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் அமலாக்க துறை சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சீர்காழி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமை தாங்கினார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தலைமை காவலர்கள் அமல்ராஜ், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %