0 0
Read Time:2 Minute, 9 Second

சிதம்பரம் வடக்குவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். பொறியாளர் மகாராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் எஸ்.பாலசரஸ்வதி வரவேற்றார். சிறப்பு அழைப் பாளராக நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்து பேசினார்.

தொடர்ந்து ஆசிர்வாதம் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.9.30 லட்சம் மதிப்பிலான பூங்காவை 3-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் குணசுந்தரி முன்னிலையில் நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் திறந்து வைத்தார். பின்னர், பெரியார் தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பில் பேட்ட ரியில் இயங்கும் 8 புதிய குப்பை சேகரிக்கும் வாகனங்களையும், வெல்ல பிறந்ததான் முதலியார் தெருவில் இல்லம் தோறும் குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில நகரமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.சி.மணி கண்டன், நகரமன்ற துணை தலைவர் முத்துக்குமார், கவுன் சிலர்கள் அப்பு.சந்திரசேகரன், அசோகன், ராஜன், மணிகண் டன், தஸ்லிமா, சரவணன், நகர தி.மு.க. துணை செயலாளர் கள் பாலசுப்பிரமணியன், இளங்கோவன் மாரியப்பன், நிர்வாகிகள் இளைஞர் அணி அமைப்பாளர் மக்கள் அருள் தகவல் தொழில்நுட்ப பிரிவு, ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %