0 0
Read Time:1 Minute, 32 Second

செம்பனார்கோவில், ஆகஸ்ட்- 05:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சி மகாராஜபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் கோவிலில் ஆடி மாதத்தை ஒட்டி ஆடி மாத வெள்ளிக்கிழமை பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஜோதிடர் ஆலய அறங்காவலரும், தேமுதிக பரசலூர் ஒன்றிய கவுன்சிலருமான கே.எஸ்.கிருஷ்ணன் தலைமையில் பெண்கள் உட்பட ஏராளமானோர் விரதம் இருந்து செம்பனார்கோவில் தாதா விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

விரதம் இருந்த பக்தர்கள் கொண்டு வந்த பாலை நாகாத்தமனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மகா தீபாரதனை நடைபெற்றது. வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க பச்ச காளி, பவளக்காளி, கருப்பண்ணசாமி ஆட்டத்துடன் வெகு விமர்சையாக பால் குடத்திருவிழா நடைபெற்றது. பின்னர் அன்னதானமும் நடைபெற்றது.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %