அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கரூர் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஆண்டான் கோயில் கிழக்கு, மண்மங்கலம் தாலுகாவில் அசோக்குமார் தனது பெயரில் புதிய வீட்டை கட்டி வருகிறார். இந்த வீடு 2.49 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இது தொடர்பான நோட்டீஸை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கொடுத்துள்ளனர்.
அந்த நோட்டிசில் லட்சுமி, நிர்மலாவிற்கு அந்த வீட்டை பரிசாக கொடுத்துள்ளார் என்றும், இந்த வீடு சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வீட்டை வேறொரு பெயரில் மாற்றவோ, விற்கவோ கூடாது என்று சார்பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டிசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வீடு முடக்கப்பட்ட நோட்டீஸ் நிர்மலாவுக்கு அனுப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.