0 0
Read Time:1 Minute, 24 Second

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 13:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன்பந்தல் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் மாவட்டத் தலைவர் எஸ் எம் அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர்கள் புஹாரி, சங்கையாசர் கிளைத் தலைவர் தமிமுன்அன்சாரி, செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மருத்துவர் நந்தபிரசாத் தலைமையிலான மருத்துவ குழுவினர் 50-க்கும் மேற்பட்ட குருதிக்கொடை வழங்கியவர்களிடமிருந்து ரத்தத்தை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து குருதிக்கொடை வழங்கியவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %