செம்பனார்கோயில், ஆகஸ்ட்-12:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 40 இலட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கஞ்சாநகரம் ஊராட்சியில் ரூ.25 இலட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டிலான சாலையோர தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், மேலையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேலையூர் ஊராட்சியில் பட்டன்குளம் ரூ.4 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேலையூர் ஊராட்சியில் ரூ.4 இலட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், கீழையூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளதையும், கீழையூர் ஊராட்சியில் ரூ.96 இலட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் கீழையூர் செல்லகோயில் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.
மேலும், நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தரமானதாகவும், மேற்கொண்டு ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, கீழையூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலெட்சுமி, மீனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்