தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 21:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, மாணிக்கபங்கு ஊராட்சி, சின்ன ஆனைக்கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் புதிதாக புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாகதியுடன் கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் கோவில் நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பலவகை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது இங்கு சிறப்பு வாய்ந்தது குறிப்பிடத்தக்கது கும்பாபிஷேக் ஏற்பாடுகளை கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்திலேயே தரங்கம்பாடி தாலுகாவில் தனி கோவிலில் அமைந்துள்ளது சிறப்பு பெற்ற கிருஷ்ணன் கோவிலாக விளங்குகிறது. கும்பாபிஷேக விழாவில் பொறையார் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்