சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதுடெல்லி, சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை 5.47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டு, 6.04 மணிக்கு தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேக்கு தள்ளிப்போகலாம் என்றும் செய்தி வெளியானது. இந்த நிலையில், நாளை திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ இன்று அறிவித்துள்ளது. தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை நிலவில் தரையிறங்கும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
‘நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சந்திரயான் -3ன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. திட்டமிட்டப்படி நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்பகுதியில் லேண்டர் தரையிறக்கப்படும். சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கப்படும் நிகழ்வை நாளை மாலை 5.20 மணி முதல் நேரலையில் பார்க்கலாம்’ என இஸ்ரோ டுவீட் செய்துள்ளது.