செம்பனார்கோவில், ஆகஸ்ட்- 23:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலம் தழுவி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் அகில இந்திய விவசாயி தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய தலைவர்கள் கருணாநிதி பாலகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் மத்திய அரசை கண்டித்து செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் இருந்து பேரணியாக செங்கொடி ஏந்தி கீழ முக்கூட்டு வழியாக செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து 100 நாள் வேலையை முழுமையாக அமல்படுத்தவேண்டும், 100 நாள் வேலை சம்பள பாக்கிகளை உடனே வழங்கிட வேண்டும், புதிய வேலைக்காண அட்டைகளை வழங்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாகவும், தினக்கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும், பேரூராட்சி மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்களை முன்வைத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட தலைவர் காபிரியல், மாவட்ட துணைத் தலைவர் சரவணன், தரங்கை ஒன்றிய செயலாளர் தமிழ்வாசகம், மாவட்ட குழு உறுப்பினர் செல்வபாக்கியவதி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர். இதில் ஒன்றிய மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்து கட்ட முயற்சி செய்வது வருகிறது. 2023 ஆண்டிற்கான பட்ஜெட்டில் 30 ஆயிரம் கோடி ரூபாயை குறைத்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆண்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திட வேண்டும். மாநில அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 150 நாட்கள் வேலையும், 300 ரூபாய் தினக்கூலி என்பதையும் வழங்கிடு. தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் நிறுத்தப்பட்டுள்ள நகர்ப்புற வேலை திட்டத்தை செயல்படுத்து. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேரூராட்சிகளின் நகர்புற வேலை திட்டத்தை கொண்டுவர திட்டங்களை உருவாக்க வேண்டும் என விளக்க உரையாற்றினர். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்