0
0
Read Time:1 Minute, 19 Second
இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் அதன் தென் துருவத்திற்கு அருகே வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.
நிலவின் தென் துருவம் அருகே சென்ற முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளோம்! – சந்திரயான் 3 திட்ட இயக்குநர் தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் பேட்டி.
நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில்செலுத்தப்பட்டது. அதன்பிறகு, பூமியை சுற்றிவந்த விண்கலம் கடந்த ஆக.1-ல்புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. ஆக. 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.