அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக தொடர்பான குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் ஜூன் 14-ந்தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் ஆகஸ்ட் 7-ம் தேதி 5 நாட்கள் காவலில் எடுத்தனர். பின்னர் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதனிடையே சென்னை எம் பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி சிவகுமார், அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என ஆணையிட்டார்.