கொரோனா வைரஸ் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய அரசு 14 நாள் முழு ஊரடங்கினை அமல்ப்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட அவர், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதுபற்றி முடி காணிக்கை செலுத்திய அ.தி.மு.க-வினரிடம் கேட்டபோது,“எங்க தொகுதியின் காவலர் விஜயபாஸ்கர். கட்சி பாகுபாடின்றி விராலிமலை தொகுதி மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களையும், உதவிகளையும் செஞ்சிருக்காரு. என்னைக்கும் அவர் செஞ்ச உதவிகளை மறக்க மாட்டோம். 3-வது முறையாக விராலிமலையில் வெற்றி பெற்றால், விராலிமலை சுப்பிரமணியசுவாமிக்கு முடி காணிக்கை செலுத்துவதாக நேர்த்திக்கடன் வைத்திருந்தோம். அதே போல மிகப்பெரிய வெற்றியும் பெற்றுவிட்டார். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது இந்த கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.