0 0
Read Time:2 Minute, 10 Second

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால், அவற்றை திருத்தம் செய்ய தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட உதவி தேர்வு இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பெயர் ஆகியவற்றில் பிழை இருந்தால் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு அவ்வாறு திருத்தங்கள் கோரி வரும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விவரங்களை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தலைப்பு எழுத்து, பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பள்ளியின் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் சேர்த்து தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் செப்டம்பர் 8-ஆம் தேதிக்குள் மாவட்ட தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு திருத்தங்கள் கோரி வரும் அசல் மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக உதவி இயக்குநர்கள் செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், தனித்தேர்வர்களிடம் இருந்து பெறப்படும் அசல் சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %