சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேச காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்களை ஒழிப்பது போல் சனாதன தர்மத்தை சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரில் உள்ள காவல்நிலையத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்கள் அளித்த புகாரின்பேரில் 153, 295 ஆகிய சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.