அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் முறைகேடு புகார் எதிரொலியாக மறு தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்திருக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை, கொரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் தள்ளி வைத்தது. இதைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் இணைய வழியில் நடத்தப்பட்டன. அதில், 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “பிப்ரவரி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதலாம். மறு தேர்வை தோல்வி அடைந்தவர்களுடன், வெற்றி பெற்றவர்களும் எழுதலாம். இதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. பழைய வினாத்தாள்கள் முறைப்படி, தேர்வனாது 3 மணி நேரம் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்படும். எதிர்வரும் ஏப்ரல்/மே 2021 செமஸ்டர் தேர்வுகளும் அதே முறையில் நடத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தற்போது ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் வருகிற 25ஆம் தேதி முதல் தொடர்ந்து நடத்தப்படும். அதற்கான அறிவிப்புகளை அந்தந்த பல்கலைக்கழங்கள் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது