0 0
Read Time:5 Minute, 46 Second

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தியாகராஜன். இவருடைய மகன் இளையராஜா (வயது 45).

தி.மு.க. பிரமுகரான இவர் விருத்தாசலத்தில் வள்ளலார் குடில் என்ற முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். மேலும் மணவாளநல்லூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இளையராஜா, தனது விவசாய நிலத்தில் இருந்தார். அப்போது அங்கு 2 மொபட்டுகளில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்தது. இதைபார்த்த இளையராஜா தனது காரில் தப்பி செல்ல முயன்றுள்ளார். உடனே அந்த கும்பலில் இருந்தவர்கள், 2 முறை இளையராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர், தனது காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் மறித்தனர். போலீசாரை பார்த்ததும், காரில் இருந்த ஒருவர் திடீரென அதில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றார். அப்போது அவர் அருகில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்தபோது அவரிடம் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. தேர்தல் தகராறு இதையடுத்து அவரையும் அவருடன் காரில் வந்த 7 பேரையும் பிடித்து ஆலடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தப்பி ஓட முயன்றவர் ஸ்ரீமுஷ்ணம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் விஜயகுமார் (27) என்பதும், அவருடன் வந்தவர்கள் மணவாளநல்லூரை சேர்ந்த ராஜசேகர் மகன்கள் ஆடலரசு (25), புகழேந்தி ராஜா (27), மணி மகன் வெங்கடேசன் (44), பழமலைநாதர் நகரை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (25), வெங்கடாம்பேட்டையை சேர்ந்த பிரகாசம் மகன் சதீஸ்வரன் (29), குறிஞ்சிப்பாடி அண்ணா நகரை சேர்ந்த சந்திரசேகர் மகன் அருண்குமார் (24), மதுரையை சேர்ந்த சசிகுமார் மகன் சூரிய பிரகாஷ் (25) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 8 பேரும் சேர்ந்து இளையராஜாவை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் வருமாறு:- இளையராஜாவின் அண்ணன் நீதிராஜன் மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஆடலரசுவின் தாய் மங்கையர்க்கரசி தேர்தலில் போட்டியிட்டார். அப்போது இளையராஜா தரப்பினருக்கும், ஆடலரசு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இளையராஜா ஆடலரசுவை தாக்கி உள்ளார். இவ்வாறு அடிக்கடி அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதால், இளையராஜாவை ஆடலரசு தரப்பினர் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆடலரசு உள்பட 8 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய 2 துப்பாக்கிகள், கத்தி, இரும்பு கம்பிகள், கார், 2 மொபட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் கை, கால்கள் முறிந்த விஜயகுமார், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %