0 0
Read Time:4 Minute, 0 Second

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடு அதிகமாக இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், ஒழுகச்சேரி பகுதியில், தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்றார். அப்போது ஆளுநர் பேசியதாவது:

தாழ்த்தப்பட்டோர் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது தமிழ்நாட்டில் தான் எனவும் கூறினார். கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது, குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலப்பது, தீண்டாமை கொடுமைகள், சாதிய பாகுபாடுகள் ஆகியவை தமிழ்நாட்டில் தான் அதிகம் உள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கோயில்கள் என்பது நம் கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. கோயில் என்பது வெறும் வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல், அது நம் கலாச்சாரம், வாழ்க்கையுடன் பிண்ணிப் பிணைந்தது.

இந்த பாரத நாடு மன்னர்களால் உருவாக்கப்படவில்லை. ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்ட பெருமை மிகு நாடு இது. தர்மத்தின் அடிப்படையில் அறம் சார்ந்து இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது. தர்மத்தின் அடிப்படையில் கலாச்சாரம், அதை சார்ந்த சம்பிரதாயங்கள் ஆயிரம் இருந்தாலும், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை பாரதம் ஒன்றுபட்ட குடும்பமாகத் திகழ்கிறது.

பாரதத்தின் வலிமை பாரத தர்மத்திலிருந்து உருவானது. இந்து தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த நாட்டில் யாரும் புறக்கணிக்கப்பட்டவர்கள் கிடையாது. வெவ்வேறு மதம், இனமாக இருந்தாலும் அனைவரும் தர்மத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டவர்கள். இதன் அடிப்படையில் பாரதம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கில்ஜி, துக்ளக், கால்டுவெல், ஜி.யு. போப் உள்ளிட்டோர் வந்து நம்முடைய தர்மத்தை சீரழிக்க நினைத்தாலும், யாராலும் வெற்றி பெற முடியவில்லை. பாரதிய தர்மம் நம்முடைய இதயத்தில் ஒன்றி இருப்பதே அதற்கு காரணம்.

ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் நம்முடைய ஆன்மிகம், மொழி, பண்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றனர். அதனால்தான் அரசியலில் விடுதலை பெற்றிருந்தாலும், நம் கலாச்சாரம், பண்பாட்டை எப்போது மீட்டுருவாக்கம் செய்கிறோமோ அன்றுதான் உண்மையான விடுதலை என மகாத்மா காந்தி கூறினார்.

சுதந்திரத்துக்கு பிறகு சாலை, மருத்துவம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளில் முனைப்பு காட்டினோம். ஆனால் கலாசார மறுமலர்ச்சிக்கு எந்தவித முன்னெடுப்பும் செய்யப்படவில்லை. இப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசால் நம் நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக நம் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. மிக விரைவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி விடுவோம் என்றார் ஆளுநர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %