2024-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு(நீட்) மே 5 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்கள், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜேஇஇ முதல் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜேஇஇ இரண்டாம் தேர்வு அடுத்தாண்டு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு(நீட்) மே 5, 2024 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
க்யூட் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 15 முதல் மே 31, வரையும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 11 முதல் மார்ச் 28, 2024 வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.