டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சிவப்பு சட்டை அணிந்து சுமையை (சூட்கேஸ்) தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அண்மையில் ரயில் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் (போர்ட்டர்கள்) ராகுல் காந்தியை சந்திக்க விருப்பம் தெரிவித்த வீடியோ ஒன்று வைரலானது.
இதனையடுத்து டெல்லி ஆனந்த் விஷார் ரயில் நிலையத்திற்கு ராகுல் காந்தி இன்று திடீரென சென்றார். அபபோது சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் சவகாசமாக அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் அணியும் சிவப்பு நிற சட்டையை ராகுல் காந்தி அணிந்தார். கையில் நம்பர் பேட்சையும் அவர் கட்டிக்கொண்டார். பின்னர் சுமையை (சூட்கேஸ்) தூக்கிக் கொண்டு அவர் சிறிது நேரம் நடந்து சென்றார்.
அபோது ராகுல் காந்தி ஜிந்தாபாத் என தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். 1983 ஆம் ஆண்டு வெளியான மஸ்தூர் திரைப்படத்தின் “ஹம் மெஹ்னட்காஷ் இஸ் துனியா சே” பாடலுடன் ரயில் நிலையத்தில் சுமைகளை ராகுல் காந்தி சுமக்கும் வீடியோவை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.