காட்டுமன்னார்கோவில் செப்,22
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்கள் மடத்தில்
ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி தினமாக நேற்று வட அமெரிக்க பன்னிரு திருமுறை கழகம் மற்றும் ஓதுவா மூர்த்திகள் நலச்சங்கம் சார்பில் உலக நலன் கருதி திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது உலகம் முழுவதும் நேற்று 28 நாடுகளில் 24 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது .
இதில் இந்தியாவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணிநேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதில் 108 ஓதுவா மூர்த்திகள் கலந்து கொண்டு 12 மணிநேரம் தொடர்ந்து திருமுறை விண்ணப்பம் செய்தனர்.
27 ஞான ஆசிரியர்களால் இயற்றப்பட்ட பன்னிரு திருமுறை போற்றும் வகையில்
இந்த நிகழ்வு நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டு 108 ஓதுவார்கள்,16 பக்க வாத்திய கலைஞர்
கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வட அமெரிக்க பன்னிரு திருமுறை கழக ஒருங்கிணைப்பாளர் அமெரிக்காவை சேர்ந்த வெங்கடேசன் பிள்ளை , பிரபாகரன் சுவாமிநாதன்
ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் உலக மக்கள் நலமுடன் நோய் நொடி இல்லாமல் வாழவும்,செல்வ செழிப்போடு ,கல்வி விவசாயம் செழித்து வளர வேண்டியும் வேண்டி கொண்டு திருமுறை விண்ணப்பம் என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.
அதனையடுத்து இதில் பங்கேற்ற ஓதுவார்களுக்கு சால்வை அணிவித்து பரிசு பொருட்கள் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு வட அமெரிக்க பன்னிரு திருமுறை கழகத்தை சேர்ந்த கடலூர் வெங்கட், கள்ளக்குறிச்சி சுப்பிரமணியம், சேலம் சந்திரசேகர், ஓதுவார்கள் சிவக்குமார், முத்துக்குமரன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி