நாகை:முழு ஊரடங்கு எதிரொலி: உப்பு ஏற்றி அனுப்பும் பணிகள் வெகுவாக பாதிப்பு!
தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக இன்று முதல் வேதாரண்யத்தில் உப்பளத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால் லாரிகளில் உப்பு அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு கடினல்வயல் போன்ற இடங்களில் சுமார் 3,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால் வெளிமாநிலங்களுக்கு லாரிகளில் உப்பு ஏற்றி அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூரிலிருந்து உப்பு ஏற்ற வந்த லாரிகள் புறநகர் பகுதியிலும் சாலையோரத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.