24.09.2023 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி, சங்கம் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து சிதம்பரம் வி. எஸ். ஆர். நகரில் உள்ள பிரில்லியன்ட் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கே.நிர்மலா தலைமை தாங்கினார். சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் முனைவர் எச்.மணிகண்டன், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் முனைவர் வி.நடனசபாபதி, ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.மாரியப்பன், பள்ளி தாளாளர் மற்றும் ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் தீபக் குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ரோட்டரி சங்கங்களின் செயலாளர்கள் முன்னிலை வகித்தார்கள்.
சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் எல்.சி.ஆர். கே. நடராஜன் ரோட்டரி இறைவணக்கம் வாசித்தார். கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜூனியர் சுந்தரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தி உரையாற்றினார்.
டாக்டர் தேவசேனன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய மருத்துவர்கள் விழிப்புணர்வு உரையாற்றி கலந்து கொண்ட முதியோர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் மருந்து மாத்திரைகளும் வழங்கினர்.
முகாமில் முன்னாள் ரோட்டரி துணை ஆளுநர் யாசின், முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கேசவன், ரோட்டரி உறுப்பினர்கள் பண்ணாலால், சக்திவேல், முரளிதரன், சின்னையன், தினமணி, தினமலர், மாலைமலர் மற்றும் பல பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் ஊர் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இறுதியில் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் முனைவர் ஸ்ரீ ராம் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் முனைவர் ஆறுமுகம் தொகுத்து வழங்கினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி