2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள். ரிசர்வ் வங்கி கொடுத்த கெடு முடிவடைவடைகிறது.
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ம் தேதி உத்தரவிட்டது
அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. பல்வேறு அரசு துறை நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டன.
இதேபோல் செப்டம்பர் 28-ம் தேதிக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் பேருந்துகளில் டிக்கெட் வாங்க கொடுத்தால், அதை வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது
ஆம்னி பேருந்துகளில் 2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இதனிடையே ரிசர்வ் வங்கியின் வெளியிட்ட அறிவிப்பின் படி, கடந்த ஆகஸ்ட் 31 நிலவரப்படி ரூ.0.24 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது
புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி ஆகும். அதாவது, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறும் அறிவிப்பு வெளியான மே 19-ம் தேதியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 93% நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.