0 0
Read Time:1 Minute, 31 Second

அண்ணாமலைநகர்கவர்னர் பட்டம் வழங்குகிறார்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 85-வது பட்டமளிப்பு விழா வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கில் நடைபெற இருக்கிறது. விழாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார்.

அண்ணாமலை பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்து கொண்டு விழா பேரூரையாற்றுகிறார். சந்திரயான்-3 திட்ட இயக்குனர் பங்கேற்புசிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) சந்திரயான்-3 திட்ட இயக்குனர் ப.வீரமுத்துவேல் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

இந்த விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %