0 0
Read Time:2 Minute, 14 Second

பீகாரில் நடத்தப்பட்டது போன்று தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. 90 ஆண்டுகளில் நாட்டில் நடத்தப்பட்ட முதல் சாதிவாரி கணக்கெடுப்பு இதுவாகும். இதற்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாதக, பாதகமான தீர்ப்புகள் வந்தன. இதனையடுத்து நேற்று பீகார் அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது.

இதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பீகார் மாநில அரசு வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், “பீகாரில் OBC + SC + ST பிரிவினர் 84% என்று சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவினர். இவர்கள் நாட்டின் பட்ஜெட்டில் 5% மட்டுமே கையாளுகின்றனர். எனவே, நாட்டில் சாதி ரீதியான புள்ளி விவரங்களை அறிந்து கொள்வது அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %