19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கி, சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் இதுவரை இல்லாத எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் ஆசிய போட்டிகளில் பங்கேற்று விளையாடி பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். அதாவது கடந்த 2010 இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் 625 பேர் பங்கேற்றிருந்ததே சாதனையாக பேசப்பட்ட நிலையில், இம்முறை இந்தியா சார்பில் 634 போட்டியாளார்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
அதே சமயம் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிலான புதிய உச்சத்திலான பதக்கங்களை வென்று குவித்திருக்கிறது இந்தியா. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 16 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தமாக 72 பதக்கங்களை வென்றிருக்கிறது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா புதிய இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.
கடந்த முறை இந்தோனேசியாவில் நடைபெற்று முடிந்த ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் என 70 பதக்கங்களை வென்று குவித்திருந்ததே பதக்கப்பட்டியலில் புதிய உட்சமாக இருந்திருந்ததை அடுத்து, இந்த ஆண்டு 72 பதக்கங்களை தொட்டிருப்பது புதிய உட்சமாகும்.
மேலும் ஆசிய போடிகள் முடிவடைய இன்னும் 4 நாட்கள் மீதம் உள்ளதால், இந்தியா 100 பதக்கங்களை தொடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்தியாவின் புதிய உட்சமான இந்த பதக்கப் பட்டியலில் பெரும்பாலான பதக்கங்கள் தடகளத்திலேயே கிடைத்துள்ளது.
ஸ்குவாஷ் குழு விளையாட்டில் இந்திய ஆடவர் அணி, மகளிர் ஈட்டி எறிதலில், 5000 மீட்டர் தடையோட்டம், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வில் வித்தை போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கம் தங்கத்தில் முடிந்திருக்கிறது. அதே போல மேலும் பல போட்டிகளில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் முடிவடைய இன்னும் 4 நாட்கள் மீதம் உள்ள நிலையில் இந்தியா தனது பதக்க எண்ணிக்கையை 70 இல் இருந்து 90 க்கும் மேற்பட்ட பதக்கங்களுடன் முடிக்கும் என இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.