தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மாதத்திற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மழைக்காலம் தொடங்கும் போதே, கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு பிறகு, தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கொசுக்களால் பரவும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடப்பாண்டில் மாதம் டெங்கு பாதித்தோர் எண்ணிக்கை ;
ஜனவரி – 866
பிப்ரவரி – 641
மார்ச் – 512
ஏப்ரல் – 302
மே – 271
ஜூன் – 364
ஜீலை – 353
ஆகஸ்டு – 535
செப்டம்பர் – 730
இந்த நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கி 8 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இந்த எட்டு நாட்களில் 273 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரையிலும் 4800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளொன்றுக்கு 40 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டில் 4 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 503 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்த மூன்று மாதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு விகிதம்
2019ல் டெங்கு பாதிப்பு – 8527 உயிரிழப்பு 5
2020ல் டெங்கு பாதிப்பு 2410 – உயிரிழப்பு பூஜ்ஜியம்
2021 ல் டெங்கு பாதிப்பு 6039 – உயிரிழப்பு 8
2022 ல் பாதிப்பு 6430 – உயிரிழப்பு 8 நடப்பாண்டில் நேற்று வரை டெங்கு பாதிப்பு 4800 உயிரிழப்பு 4 ஆகவும் பதிவாகி உள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது.