0 0
Read Time:6 Minute, 17 Second

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காட்சி பொருளாக மாறிய 1 ரூபாய் குடிநீர் திட்ட எந்திரம்! சுற்றுலா பயணிகள் அவதி,,.சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!

அவர் குறிப்பிடுகையில்,

ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைந்த கட்டணத்தில் நீண்ட நேரம் பயணம் செய்யலாம் என்பதாலும், அசதியாக இருக்காது என்பதாலும் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். இதனால் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இலவச வைபை வசதி, நகரும் படிக்கட்டு என்பது உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு ஆன்மீக, நவகிரக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மயிலாடுதுறையை சுற்றியுள்ள சைவ வைணவ ஆலயங்களுக்கு வருவதுடன் ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வட இந்தியாவில் இருந்து சிலர், பல லட்சம் செலவு செய்து ரயிலை வாடகைக்கும் எடுத்துக்கொண்டும் வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையம் மட்டுமல்லாமல் திருவாரூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி காரைக்கால் கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் சீர்காழி சிதம்பரம் கடலூர் விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் வரை உள்ள ரயில் பாதையில் இடைப்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் போதுமான சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை., ரயில் நிலையங்களில் குடிநீர் வராத நிலையில் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காட்சி பொருளாக மாறிய ரூ.1 குடிநீர் திட்ட எந்திரம் இந்த எந்திரங்களில் ரூ. 5 செலுத்தி ஒரு லிட்டர் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். பிறகு
ஒரு ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டம் அமலில் இருந்தபோது பயணிகள் தண்ணீருக்காக செலவு செய்யும் தொகை மிக குறைவாகவே இருந்தது. ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரெயில் நிலையங்களில் ஒரு ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. இந்தத் திட்ட மூலம் ஒரு ரூபாய்க்கு சுத்தமான 300 மி.லி. குடிநீர், ரூ.5-க்கு ஒரு லிட்டர் குடிநீர் வழங்கி வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு ரயில் பயணிகளிடையே மிகப்பெரும் வரவேற்பு இருந்தது.
தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை ,மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் இந்தத் திட்டம் அமலில் இருந்தது.

இதில் குடிநீரை சுத்திகரித்து வழங்கும் எந்திரங்கள் நடைமேடையில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிற்கும் இடத்தின் அருகே நிறுவப்பட்டு இருந்தது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்திலும் இந்த எந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளது. இந்த எந்திரங்களில் தண்ணீர் கிடைத்ததால் பயணிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்தத் திட்டம் செயல்படாமல் முடங்கியது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வேறு வழியின்றி ஒரு லிட்டர் ரூபாய் 15,20 அல்லது 25 என்று கூடுதல் விலை கொடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் குளிர்ச்சியான நீரும் வழங்கப்பட்டதால் கோடை காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் கடந்த 2ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படாமல் உள்ளதால் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஒரு ரூபாய் குடிநீர் திட்ட எந்திரம் காட்சி பொருளாக மாறி உள்ளது. எனவே காலம் தாமதிக்காமல் மீண்டும் ஒரு ரூபாய் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும், தெற்கு ரயில்வே நிர்வாகம் மயிலாடுதுறை முதல் விழுப்புரம் திருச்சி மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %