0 0
Read Time:5 Minute, 3 Second

அதிமுக தனியாக வந்தாலும் சரி, பாஜகவுடன் சேர்ந்து வந்தாலும் சரி வெல்லப்போவது என்றும் திமுக தான், INDIA கூட்டணி அரசு தான் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,அண்ணா நகர் பகுதியில் உள்ள கிரசன்ட் மைதானத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1000 நபர்களுக்கு கல்வி உக்கத் தொகை
மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மேற்கு மாவட்ட திமுக
செயலாளர் சிற்றரசு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான ஊக்கதொகையுடன் புத்தக பைகள் ,பெண்களுக்கான தையில் இயந்திரம் , குக்கர், ஐயன் பாக்ஸ், 10 மாற்று
திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்கள் வழங்க பட்டது.

இதனை அடுத்து நிகழ்ச்சி ஏடையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மாணவர்கள் பக்கம் இருக்கும் கட்சி
திமுக. இந்த ஆட்சியில் இளைஞர் அணிக்கு நிறைய பொறுப்புகள் கொடுக்க பட்டுள்ளது. சென்ற ஆண்டு குஜராத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வர வேண்டும் என்று மோடி கூறியிருக்கிறார். ஆனால் 2006 ஆம் ஆண்டே கருணாநிதி கொண்டு வந்து விட்டார்.

நீட் தேர்வை தலைவர் ரத்து செய்தார். ஜெயலிதா இருந்த போதும் நீட் உள்ள வரவில்லை. ஆனால் இப்பொழுது நீட் – ஐ தமிழகத்திற்கு கொண்டு வந்தது யார் என்று உங்களுக்கு தெரியும். இந்த 9 ஆண்டுகள் ஆட்சியில் வளர்ந்தது ஒரே குடும்பம் எல்லோருக்கும் தெரியும் அது அதானி குடும்பம் தான். 2018ல் இந்தியா 2020க்குள் வல்லரசு ஆகிவிடும் என்று மோடி கூறினார். ஆனால் தற்போது 2048 இல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று கூறிவருகிறார்.

ஜெயலலிதா இருந்த பொது “மோடி யா இல்லை இந்த லேடியா” என்று கேட்டார். ஆனால் இப்பொழுது இருக்கும் அடிமைகள் “மோடி எங்கள் டாடி” என்று கூறினார்கள். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு மதம், ஒரே உணவு என மாநிலங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு
செயல் பட்டு வருகிறது. 2014 முதல் 2023 வரை இந்த 9 ஆண்டுகளில் வரியாக தமிழ்நாடு வழங்கிய 5 லட்சம் கோடி ரூபாய். ஆனால் தமிழக அரசுக்கு திரும்ப மத்திய அரசு ஒதுக்கிய நிதி வெறும் 2 லட்சம் கோடி ரூபாய். ஆனால் கடந்த 9 ஆண்டு கால இடைவெளியில் மூன்று லட்சம் கோடி மட்டும் வரி கட்டிய உத்திரபிரதேசத்திற்கு இந்த மத்திய அரசு 9 லட்சம் கோடி நிதி அளித்துள்ளது. இப்படிபட்ட பாகுபாட்டை இந்த மத்திய அரசு பின்பற்றுகிறது.

விளையாட்டு மேம்பாட்டிற்காக குஜராத் மாநிலத்திரக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது
அறநூத்தி எட்டு கோடி ரூபாய். தமிழகத்திற்கு விளையாட்டு மேம்பாட்டிற்காக
ஒதுக்கிய நிதி 38 கோடி ரூபாய். ஆனால் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப்
போட்டிகளில் குஜராத்தில் இருந்து வாங்கப்பட்ட மெடல்கள் பூஜியம். ஆனால்
தமிழகத்திலிருந்து 28 மெடல்கள் பெற்று நம் வீரர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.

அதிமுக பிஜேபி கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக கூட்டணி நம்மையெல்லாம் ஏமாற்றி வருகிறது. பாஜகவுடன் சேர்ந்து வந்தாலும் சரி, அதிமுக தனியாக வந்தாலும் சரி வெல்லப்போவது என்றும் திமுக தான், இந்திய கூட்டணி அரசு தான்.

இவ்வாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %