0 0
Read Time:2 Minute, 19 Second

புதுச்சேரியில் கடல்நீர் செந்நிறமாக மாறியதால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

புதுச்சேரி வரக் கூடிய சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லாமல் ஊர் திரும்ப மாட்டார்கள். புதுச்சேரியின் முக்கியமான சுற்றுலா தலமாகவே கடற்கரை உள்ளது. மேலும் உள்ளூர் பொதுமக்கள் பலர் கடற்கரையில் காலை, மாலை என இருவேளை நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடற்கரை சாலையில் கடல் நீரின் நிறம் செந்நிறமாக மாறியது. காலை 10 மணி முதல் கடல் நீரானது படி படியாக நிறம் மாறத் தொடங்கியது. தொடர்ந்து 200 மீட்டர் தூரத்திற்கு தற்போது செந்நிறத்தில் மாறியது. இதனால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் கடலை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

மேலும் கடல் நீர் செம்மண் நீரானது குறித்து தகலவறிந்த ஏராளமானோர் கடற்கரையில் குவிந்தனர். தொடர்ந்து அங்கு வந்த சுற்றுச்சுழல் அதிகாரிகள், கடல் நீரை பரிசோதனை செய்வதற்கு கடல்நீரை பாட்டிலில் எடுத்து சென்றுள்ளனர். ஆற்றில் உருவாகும் ஒரு வகையான பூஞ்சைக் காளான் ஆற்று நீரோடு கடலில் கலக்கும் போது ராசாயன மாற்றம் ஏற்பட்டதே நீரின் நிற மாற்றத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான விரிவான தகவலை பரிசோதனைக்கு பின்னர் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர். கடல் நீர் செந்நிறத்தில் மாறியுள்ளதால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவும் அச்சமடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %