மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார், காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த துப்புரவு பணியாளர் தியாகராஜன் நதியா தம்பதிகளின் மகள் வர்ஷா. இவர் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியில் சர்வதேச கராத்தே வீரர் சென்சாய் கராத்தே கதிரவன் அவர்களிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
21.10.23 அன்று சென்னையில் நடைபெற்ற 40 – ஆவது தமிழ்நாடு மாநில கராத்தே போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட கராத்தே அணி சார்பாக கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாநில கராத்தே போட்டியில் பதக்கங்களை வெல்லும் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒரே கராத்தே பள்ளி என்ற பெருமையை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவியையும் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளரும் பயிற்சியாளருமான சென்சாய் கராத்தே கதிரவன் அவர்களையும் திராவிட முன்னேற்ற கழக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நிவேதா முருகன் எம் எல் ஏ, செம்பை ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கை பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல் , வார்டு கவுன்சிலர் சரஸ்வதி வெற்றிவேல் உள்ளிட்டோர் பாராட்டினர்.
செய்தி:ஆனந்த்