சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் 4.11.23 அன்று மாலை 7 மணி அளவில் சிதம்பரம் ஹோட்டல் சாரதா ராமில் சங்கத்தின் தலைவர் முனைவர் வி. நடன சபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் சாசன தலைவர்/முன்னாள் ஆளுநர் Rtn MD.Dr.P. முஹமது யாசின் அவர்கள் முன்னிலை வகிக்க, 14 வது மண்டல துணை ஆளுநர் Rtn.PHF.Dr.B. சுனில் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சங்கத்தின் சாசன செயலாளர்/முன்னாள் துணை ஆளுநர் Rtn.MPHF.Dr.M தீபக் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார். ந. பூலாமேடு கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சிவ. தேவி முருகன் அவர்கள் மனிதம் வெல்லட்டும் என்ற தலைப்பில் மிகவும் நேர்த்தியாக சுமார் 45 நிமிடம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நல சங்க உறுப்பினர்களுக்கு பதினோராயிரம் மதிப்பிலான தீபாவளி பரிசு பொருட்கள் உடை இனிப்பு மற்றும் காரம் போன்றவைகளை நபர் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் 11 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பை விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் துணை ஆளுநர் திருமிகு ஷாஜகான் அவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கின்ற ரோட்டரி மாவட்ட மாநாட்டு ஏற்பாடு குறித்து உறுப்பினர்களிடையே கலந்துரையாடினார் குறிப்பாக மாநாட்டில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இச்சங்கத்தின் செயலாளர் Rtn.Dr.G. ஆறுமுகம் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி