0 0
Read Time:2 Minute, 59 Second

மயிலாடுதுறை தரங்கம்பாடி பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பாரதிமோகன் என்பவர் அறக்கட்டளை நடத்திவரும் நிலையில் நாகையில் வீடு இல்லாமல் தவித்து வந்த ஆதரவற்ற தம்பதியினருக்கு வீடு கட்டி கொடுத்ததால் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பெரம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாரதிமோகன். கடந்த பல ஆண்டுகளாக இவர் பாரதிமோகன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி சமூக சேவைகளை செய்து வருகின்றார். மேலும் ஆதரவற்றவர்களுக்கு உணவு மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து முடி திருத்தம் செய்வது, தூய்மைப்படுத்துவது, இருப்பிடத்தைவிட்டு வெளியே சுற்றி வருபவர்களை உரியவர்களிடம் ஒப்படைப்பது, யாரும் இல்லாதவர்களை காப்பகத்தில் ஒப்படைப்பது என பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்கின்றார்.

இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வசித்து வரும் ராமச்சந்திரன் – கமலம் என்ற ஆதரவற்ற தம்பதி வீடு இல்லாமல் தவித்து வருவதை சமூக வலைதளங்களில் பார்த்துள்ளார். உடனடியாக அவர் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும் முடிவு செய்தார். வீடு கட்டிக்கொடுக்கும் அளவிற்கு வசதி இல்லை என்பதால், நேற்று சமூக வலைதளங்களில் தனது நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார். இன்று தனது நண்பர்கள் உதவியுடன், பலவேறு நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவியுடன் அற்புதமான வீடு ஒன்றையும் கட்டிக் கொடுத்தார்.

தங்களின் வாழ்நாள் கனவு நிறைவேறியது என நெகிழ்ச்சிடைந்த தம்பதியர், பாரதிமோகனை வெகுவாக பாராட்டி வருகின்றனர். உதவி செய்ய ஒருவரும் இல்லாத நிலையில் தம்பதியருக்கு கடவுளே நேரில் வந்து உதவியதை போல் கையெடுத்து கும்பிட்டு கலங்கி நிற்கிறார்கள்.மற்றவர்களின் கஷ்டங்களை கண்டு கடந்து செல்கிற சூழலில் ஆதரவற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொடுத்த மனித குலத்தின் மகத்தான மனிதன் பாரதி மோகன் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %