0 0
Read Time:1 Minute, 45 Second

புதுடெல்லி,ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 6-ந்தேதி ஆஜரான மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, வில்சன் ஆகியோர், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரும் ரிட் மனு நவம்பர் 10-ந்தேதி (இன்று) தற்காலிகமாக பட்டியலிடப்பட்டு உள்ளது, அதை நீக்கக்கூடாது என்றும்,பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு அமைக்கும் கவர்னரின் அறிவிக்கைக்கு தடை கோரிய ரிட் மனுவை இணைத்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனுக்களை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது. அதைபோல பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான அம்மாநில அரசு தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %