கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை
நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மழையின் தீவிரத்தை பொறுத்து மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடுவார்கள். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குன்னூர், கோத்கிரியில் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 24) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். மேலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் மற்ற மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.