0 0
Read Time:1 Minute, 15 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.

நவக்கிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமான இக்கோயிலில் அங்காரகன், செல்வ முத்துக்குமாரசுவாமி, தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா வருகை

பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகனுடன் வருகை புரிந்தனர்.

தொடர்ந்து கற்பக விநாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகள் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர். கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %