0 0
Read Time:1 Minute, 47 Second

தரங்கம்பாடி:மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நகராட்சி மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 300 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 77 நபர்களுக்கு கண் குறைபாடு கண்டறிப்பட்டு மேல் சிகிச்சசைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 நபர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கப்பட்டது.

கண் சிகிச்சை முகாமினை மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ராஜகுமார் முகாமை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை சென்ட்ரல் லயன் சங்க தலைவர் சுகுமாரன் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் பரமசிவம், மருத்துவர் சந்தீப் தலைமையிலான மருத்துவ குழுக்கள் பரிசோதனை செய்தனர். இதில் சென்ட்ரல் லயன் சங்க செயலர். மோகன்ராஜ் மற்றும் பொருளாளர் லயன்ஸ் மகாவீன் சந்த் ஜெயின், குரு.ராகவேந்திரன், கலியமூர்த்தி, சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் தலைவர் வேல்விழி, செயலாளர் மகாலட்சுமி, மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %