சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்டுக்கொண்டிருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஆந்திராவை நோக்கி 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடகியுள்ளது.
ஏற்கனவே சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை மிக்ஜாம் புயல் நாளைதான் கரையை கடக்கிறது. இதனால் நாளை அதிகாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருள் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 26 ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, டிசம்பர் 4 அன்று புறப்பட வேண்டிய
நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658),
மதுரை – சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638),
செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662),
நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692),
கொல்லம் – சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636),
கன்னியாகுமரி – சென்னை எக்ஸ்பிரஸ் (12634),
மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் செங்கோட்டை – தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684),
திருநெல்வேலி – சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (12632),
தூத்துக்குடி – சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694),
விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் (22662),
தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் (16752),
மதுரை – டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12651),
திருச்செந்தூர் – சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606),
குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் (16128)