மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி துலா கட்டத்தில் வருடந்தோறும் நடைபெறும் மாசி மகம் விழா 24 அன்று சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மகம் நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
வல்லாளர் என்பவர் திருவண்ணாமலையில் அரசாண்டு வந்தார். குழந்தை இல்லாத அவர் முன், எம்பெருமானாம் சிவன் ஒரு பாலகனாகத் தோன்றி, அவர் இறக்கும் தருவாயில், அவர்தம் ஈமச் சடங்குகளைச் செய்வதாக வாக்களித்தார்.அவ்வாறே, அந்த அரசர் இறந்த அன்று, சிவ பெருமான் அவரின் ஈமச் சடங்குகளை செய்ததாகப் புராணம் கூறுகிறது. இன்று கூட, மாசி மகம் அன்று, சிவ பெருமான் பூமிக்கு வந்து, அந்த அரசருக்கு உரிய சடங்குகளைச் செய்வதாகக் கருதப்படுகிறது.
அதன்படி பொதுமக்கள் அனைவரும் தங்கள் முன்னோர்கள் அனைவருக்கும் இந்த மாசி மகம் நாளில் தர்ப்பணம் செய்கின்றனர்.இந்த தர்ப்பணம் செய்வது இந்த நாளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திலும் உள்ள பொதுமக்களும் தங்கள் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.