0 0
Read Time:5 Minute, 52 Second

டெல்லி: காங்கிரஸ் கட்சி 39 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.பாஜக வேட்பாளர் பட்டியல்: உத்தர பிரதேசத்தில் 51, மேற்கு வங்கத்தில் 20, மத்திய பிரதேசத்தில் 24, குஜராத்தில் 15, ராஜஸ்தானில் 15, கேரளாவில் 12, சட்டீஸ்கரில் 11, தெலங்கானாவில் 9, அசாமில் 11, டெல்லியில் 5, ஜம்மு காஷ்மீரில் 2, உத்தராகண்டில் 3, அருணாச்சல பிரதேசத்தில் 2, கோவாவில் 1, திரிபுராவில் 1, அந்தமானில் 1, டையூ-டாமனில் 1 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் இடம்பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்டவைகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தமது முதலாவது வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் பத்திரிகையாளர்களைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி: ராகுல் காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆழப்புழா தொகுதியில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் போட்டியிடுகிறார். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் தம்பி டி.கே.சுரேஷ், பெங்களூர் ஊரக தொகுதியில் போட்டியிடவுள்ளார். முன்னாள் கேரள முதல்வர் கருணாகரனின் மகன் கே.முரளீதரன் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிர மூத்த தலைவர் சசிதரூர் திருவனந்தபுரத்தில் மீண்டும் களம் இறங்குகிறார்.பூபேஷ் பாகல்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் ராஜ்நந்த்கோவன் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

கர்நாடகத்தின் ஷிமோகா தொகுதியிலிருந்து கீதா சிவராஜ் குமார் போட்டியிடவுள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கீதா ராஜ்குமார் ஷிமோகா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில், 24 வேட்பாளர்கள் OBC, SC & ST பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 15 பொது வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால், அவர் வழக்கமாக போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

9 மாநிலங்களில்: இன்று 9 மாநிலங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ். சத்தீஸ்கர் மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கும், கர்நாடகா மாநிலத்தில் 7 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.மேலும், தெலுங்கானா மாநிலத்தில் 4 தொகுதிகள், லட்சத்தீவு, மேகலாயாவில் தலா 2 தொகுதிகள், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ். விரைவில் அடுத்த கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.நன்றி:Oneindia

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %