மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலைய வளாகத்தில், கும்பகோணம் பேருந்து நிற்கும் இடம் அருகில் பயணிகள் அமரும் பெஞ்சில் படுத்த நிலையிலேயே அனாதையாக ஒருவர் இறந்து கிடப்பதாக சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரத்தை தொடர்பு கொண்டு பயணி ஒருவர் கொடுத்த தகவலை அடுத்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக சென்று இறந்து கிடந்த முதியவரின் உடலை சட்டப்படி அடக்கம் செய்வதற்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மயிலாடுதுறை காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததும், உடனடியாக காவல்துறையை சார்ந்தவர்கள் இறந்த முதியவரை நிர்வாக முறைப்படி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து காவல்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உட்பட அனைவரும் இணைந்து ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே அனாதை பிணத்தை அடக்கம் செய்திட அனைத்து முயற்சிகளும் முன்நின்று செய்ததுடன் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் இறந்தவரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார். அப்பொழுது கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங் பைசல், ஜோதி அறக்கட்டளை ஜோதிராஜன், மஞ்ச வாய்க்கால் மனோகர், குட்டியாண்டியூர் குஞ்சால் ஆகியோர் உடன் இருந்தனர். ஒரே வாரத்தில் இரண்டாவது அனாதை பிரேதத்தை அடக்கம் செய்திட உதவிய சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரத்தை, பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும், பேருந்து நிலைய வணிகர்களும் நன்றி பாராட்டினார்கள்.