மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாயூரநாதர் கோயிலில் வருடந்தோறும் சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இந்தாண்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இந்த மயூர நாட்டியாஞ்சலி பரதநாட்டிய நிகழ்ச்சியை மயிலாடுதுறை ஆட்சியர் மாகாபாரதி தொடங்கி வைத்தார்.
இந்த மயூர நாட்டியஞ்சலி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நாட்டியக் கலைஞா்கள், ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நாட்டியக் கலைஞா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய அதிலும் சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்த பரதக்கலை மிகவும் பிரபலமானது. குறிப்பாக வரலாற்று ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
சிதம்பரம் அருகே மயங்கி கிடந்த மயிலை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைப்பு!
அந்த வகையில் அந்த கலையை ஒவ்வொரு வருடமும் வெளிப்படுத்தும் விதமாக மயிலாடுதுறை மாயூர நாட்டியாஞ்சலி 2024 நடைபெற்றது. இந்த நாட்டியாஞ்சலி 17 ஆண்டுகளாக மாயூரநாதர் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பரதநாட்டிய கலைஞர்கள் அலங்கரிக்கப்பட்டு தங்கள் நடனங்களை ஆடினார்கள்.
இதனை தொடர்ந்து பரதநாட்டிய கலைஞர்களுக்கு இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாயூர நாட்டியாஞ்சலி 2024 பரதநாட்டியத்தை மயிலாடுதுறை பொதுமக்கள் மற்றும் வெளியூர் பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.