0 0
Read Time:1 Minute, 18 Second

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இணையும் பாமக-வுக்கு 10 இடங்கள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ராமதாஸை சந்தித்து அன்புமணி நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் இடம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குஷ்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதேசமயம் பாஜக கூட்டணியில் பாமக-வுக்கு 8 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாமக உடனான பேச்சுவார்த்தையை முடித்த பிறகு தேமுதிகவை அணுக இருப்பதாகவும் பாஜக தரப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %