0 0
Read Time:3 Minute, 58 Second

தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தமிழ்நாட்டில் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

இதனிடையே காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை!

இந்த காரிய கமிட்டி கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு, ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் வேட்பாளர்களாக யார் யாரை நிறுத்துவது என்பது குறித்து நேற்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை கூட்டதில் ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 3 – பேர் கொண்ட பட்டியலை தயார் செய்தனர். அந்த பட்டியலுடன் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் மாலை டெல்லி சென்றடைந்தனர்.

இதனையடுத்து நேற்று டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை அவரது இல்லத்தில் சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார், ஸ்ரீவல்ல பிரசாத் மற்றும் தமிழக சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனையின் போது ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் கொண்ட பெயர் பட்டியல் தேர்வு குழுவிற்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %