0 0
Read Time:1 Minute, 32 Second

தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தே.மு.தி.க. தலைமை வெளியிட்டுள்ளது.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 5 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன், மத்திய சென்னை தொகுதியில் பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் நல்லதம்பி, கடலூர் மக்களவைத் தொகுதியில் சிவக்கொழுந்து, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் சிவநேசன் ஆகியோர் தே.மு.தி.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தே.மு.தி.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் மூன்று பேர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %