0 0
Read Time:2 Minute, 0 Second

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் சூரியமூர்த்தி குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதன் வேட்பாளராக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, கடந்த மார்ச் 18- ஆம் தேதி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், சூரியமூர்த்தி ஆணவக்கொலைக்கு ஆதரவாகவும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும் சர்ச்சையாகப் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில், வேட்பாளரை மாற்ற வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தினர். இதையடுத்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சிமன்றக் குழுவின் அவசர கூட்டம், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது

இதில் வேட்பாளர் சூரியமூர்த்திக்கு பதிலாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வரும் மாதேஸ்வரன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %