கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.
தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்பட்டது.
நீமன்ற கட்டணத்துக்கு அல்லாத முத்திரைத்தாளை பயன்படுத்தியே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதி.
தேர்தல் விதிக்கு முரணாக நீதிமன்ற முத்திரைத்தாளை அண்ணாமலை பயன்படுத்தியுள்ளதால் அவரது வேட்புமனுவை செல்லாது என அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு தொடர்பான ஆவண நகலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நான் ஜூடிஷியல் (Non Judicial) முத்திரைத்தாளில் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நகல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணாமலை வேட்புமனு தொடர்பாக அதிமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நகல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.