0 0
Read Time:2 Minute, 30 Second

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் தீப்பெட்டி சின்னம் வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் உள்ளது மதிமுக. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். இதனையடுத்து பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி மதிமுக தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே கடிதம் அளித்திருந்தது. இந்த மனுவை உடனடியாக தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இதனை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற அமர்வு ஒப்புதல் அளித்து கடந்த மார்ச் 27ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து மதிமுகவிற்கு கடந்த மார்ச் 27ம் தேதி பம்பர சின்னம் வழங்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இதனையடுத்து மார்ச் 27ம் தேதி தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது இரண்டு தொகுதி அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை போட்டியிடும் கட்சிக்கு ஒரே சின்னம் கேட்டால் ஒதுக்க முடியும் ஆனால் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே மதிமுக போட்டியிடுவதால் அவர்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இதனையடுத்து இன்று இந்திய தேர்தல் ஆணையம் மதிமுகவிற்கு பம்பர சின்னத்திற்கு பதிலாக தீப்பெட்டி சின்னம் ஒதுக்கியுள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %