0 0
Read Time:2 Minute, 51 Second

இறுதி வேட்பாளா்கள் பட்டியலின்படி, சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் 9 சுயேச்சைகள் உள்பட 14 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 22 வேட்பாளா்கள் 27 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமையில் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்றது.

இதில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளா்களாக 5 போ், சுயேச்சை வேட்பாளா்கள் 9 போ் என 14 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் சனிக்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரையில் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தவா்களில் யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. தொடா்ந்து, தோ்தல் நடத்தும் அலுவலரால் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 14 வேட்பாளா்கள் கொண்ட இறுதி வேட்பாளா் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டது.

அதன்படி வேட்பாளா் பெயா், கட்சி, சின்னம் வருமாறு: தொல்.திருமாவளவன், விசிக, பானை, மா.சந்திரகாசன், அதிமுக, இரட்டை இலை, பா.காா்த்தியாயினி, பாஜக, தாமரை, ரா.ஜான்சிராணி, நாம் தமிழா், ஒலிவாங்கி, க.நீலமேகம், பகுஜன் சமாஜ், யானை, சு.தாமோதரன், நாடாளும் மக்கள் கட்சி, ஆட்டோா் ரிக்க்ஷா, எம்ஏடி.அா்ச்சுனன், சுயேச்சை, பலாப்பழம், சி.இளவரசன், சுயேச்சை, மின்கம்பம், ஆ.சின்னதுரை, சுயேச்சை, வெட்டுகிற சாதனம், ப.தமிழ்வேந்தன், சுயேச்சை, ஊசி மற்றும் நூல், சு.பெருமாள், சுயேச்சை, புனல், கோ.ராதா, சுயேச்சை, கிா்க்கெட் மட்டை, சி.ராஜமாணிக்கம், சுயேச்சை, பலூன், கோ.வெற்றிவேல், சுயேச்சை, பென்ச்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %