0 0
Read Time:2 Minute, 31 Second

மக்களவைத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட 74 வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அத்துடன் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. மதிமுக சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. “24 உரிமை முழக்கம்” என்ற பெயரில் 74 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் கூடவே கூடாது, குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்ப பெற வேண்டும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், கூடங்குளம் அணுமின் நிலையம் மூடல் உள்ளிட்ட 74 வாக்குறுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %